தற்போதைய செய்திகள்

ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 585 பயனாளிகளுக்கு ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 245 பயனாளிகளுக்கு ரூ.29,40,000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 60 பயனாளிகளுக்கு ரூ.69,14,000 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், 41 பயனாளிகளுக்கு ரூ.11,20,20,500 மதிப்பீட்டில் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டாக்கள், 232 பயனாளிகளுக்கு ரூ.13,92,000 மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள்,

6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,99,994 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.60,000 மதிப்பீட்டில் வேளாண் உபகரணம் என மொத்தம் 585 பயனாளிகளுக்கு ரூ.12,39,26,494 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன் பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, அரசு வழக்கறிஞர் அருள் முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில்குமரன், பேரவை ஸ்ரீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, நிலவள வங்கி தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கராத்தே பெரியசாமி, பூக்கடை மாதேஸ்வரன், ராஜேந்திரன், செல்லப்பன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.