நீலகிரி

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை-தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்

நீலகிரி

கொடைக்கானலில் 3 மணி நேரத்தில் 234 மி. மீ., மழை கொட்டி தீர்த்தது. 3 மணி நேரத்தில் 234 மி.மீ .,பதிவான நிலையில், மலை பகுதியில் அனைத்து துறையினரும் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மலைப்பகுதியில் சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இரவு முழுவதும் கனமழையாக கொட்டி தீர்த்தது.

இதையடுத்து மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. மன்னவனுார் பகுதியில் கிருஷ்ணம்மாள் வீடு சேதம் அடைந்தது.

ஏரி சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கொடைக்கானல் ஏரி முழு அளவை எட்டியதால் உபரி நீர் பெரிய ஆற்றில் செல்கிறது. மேல்மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மலைப்பூண்டு, காய்கறிப்பயிர்கள் பாதித்துள்ளது.