வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

மதுரை
மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டம் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், கனமழை காரணமாகவும் வைகை அணையில் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டி வருகிறது. மேலும் மதுரை, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து கடந்த 27ம்தேதி முதல் 7 மதகு கண் வழியாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வைகை அணையில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் 4006 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 4200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக வைகை ஆற்றின் கரையோர மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கிய நிலையில் பாலத்தில் ஓரத்தில் உள்ள சாலைகளை முழுமையாக தற்போது வரை தடை செய்யவில்லை
தடுப்பு விழிகள் எதுவும் அமைக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத ஒரு நிலையில் வாகன ஓட்டிகள் எப்படியாவது தண்ணீரை கடந்து செல்லலாம் என்கின்ற நோக்கில் மிகுந்த சிரமத்திற்குள் பயணம் செய்து வருகின்றனர் காலை நேரம் பள்ளி மற்றும் கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் இருசக்கர நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் இந்த சாலையை பயன் பயன்படுத்தி வரக்கூடிய
நிலையில் உரிய தடுப்பு வழிகள் அமைத்து மாற்று பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய நிலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது
ஏற்கனவே மதுரையில் கடந்த மாதத்தில் கன மழை பெய்த போது நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர். அதனைத் தொடர்ந்து மேலக்கால் பகுதியில் அதிகமான நீர் வரத்தால் ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் நீர் மூழ்கி பலியானார்கள், ஆனாலும் தொடர்ந்து அரசின் சார்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்படவில்லை.