கன்னியாகுமரி

கொரோனா நோயாளிகள் 500 பேருக்கு மூலிகை பிரியாணி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகர கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 500 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணியை தமிழ்நாடுஅரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்கவும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின்படி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக, ஒன்றிய, நகர அணிச் செயலாளர்கள் சார்பில் மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயூர்வேதா மருத்துவ கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மருத்துவ மனை போன்றவற்றில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர், முக கவசங்கள், மூலிகைகளால் தயாரிக்கப்படும் மீன் குழம்பு சாப்பாடு, கோழி பிரியாணி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாகர்கோவில் மாநகர கழகம் சார்பில் மாநகர செயலாளர் சந்துரு (எ) ஜெயச்சந்திரன் மற்றும் முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.அக்ஷயா கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 500 கொரோனா நோயாளிகளுக்கு மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஏ.ராஜன், கழக இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் கவிஞர் சதாசிவம், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணகுமார், அழகேசன், வீராசாமி, மெர்லியன்ட் தாஸ், அசோக்குமார், ராதாகிருஷ்ணன், கழக செயற்குழு உறுப்பினர் டாரதி சாம்சன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், அணி செயலாளர்கள் நரசிங்கமூர்த்தி, வழக்கறிஞர் சுந்தரம், ராஜாராம், ஜெஸிம், சுகுமாரன், சதிஷ்குமார், ஹெப்சிபாய், நகர மகளிரணி செயலாளர் சாந்தி, துணைச்செயலாளர் தமிழரசி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.