தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் விலகி நத்தம் இரா.விசுவநாதன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை சிறப்பான முறையில் நடத்தி வருகின்ற முதல்வர், துணை முதல்வருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வருகிறது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், முக்கிய நிர்வாகிகளும் விலகி சாரை சாரையாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் நத்தம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.