சிறப்பு செய்திகள்

கோவா, உத்தரகாண்ட் முதல்வர்கள் விரைவில் நலம்பெற துணை முதலமைச்சர் பிரார்த்தனை

சென்னை

கோவா மற்றும் உத்தரகாண்ட் முதல்வர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிராத்தனை செய்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவா முதலமைச்சர் டி.ஆர்.பிரமோத் சாவந்த் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் விரைவாக குணமடைந்து பொதுசேவையை தொடர்வதற்கு பிரார்த்தனை செய்கிறேன் என்றும். உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நலமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

அவருக்கு நல்ல உடல் நிலையும், உடல் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.