தற்போதைய செய்திகள்

ஆரணியில் 68 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி வழங்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 68 கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் நிதியுதவி வழங்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் நிதியுதவி வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முடிவு செய்தார். அதன்படி செய்யாறு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 68 கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் நிதியுதவி வழங்கும் பணியை கொர்காத்தூர் பகுதியில் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக கொர்க்காத்தூர், கடுகனூர், மேல்நகரம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

அம்மாவின் அருளாசியுடன் தமிழகத்தை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். குறிப்பாக ஆரணி தொகுதியில் கழக அரசு எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளது. ஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அதற்கான கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. ஆரணி கல்வி மாவட்டமாக செயல்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டு டிஎன்.97 என்ற எண் வழங்கப்பட்டு வருகிறது.

ஆரணி பகுதியில் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரணி மத்தியில் உள்ள சூரிய குளம் 7 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளது,

எஸ்.வி.நகரம், காமக்கூர், ஆரணி கைலாய நாதர் ஆலயம், தேவிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதியதாக தேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆரணி காந்தி மார்க்கெட் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் அருகில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதியதாக திருமணமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட சாதனைகளை கழக அரச ஆரணி தொகுதியில் செய்துள்ளது. ஆகையால் வரும் தேர்தலில் மீண்டும் கழக ஆட்சி தொடர அனைவரும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து கழகம் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு தெற்கு ஒன்றிய செயலாளர் அருகாவூர் எஸ்.அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வழக்கறிஞர் க.சங்கர், எம்.மகேந்திரன், ப.திருமால், வே.குணசீலன், சி.துரை, மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாரிபாபு, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாராசூட் பெருமாள், உள்ளிட்ட பலர் கொண்டனர்.