சிறப்பு செய்திகள்

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களை நினைவு கூர்ந்து, அவரை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை

இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளில் அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து அவரை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, தேசத்திற்காக பாடுபட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

சுதேசி கப்பல் நிறுவனத்தின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில், நாட்டிற்காக அவர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து அவரை போற்றி வணங்குகின்றேன்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.