தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பில் நடைபாதை பணி – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சென்னை

விருகம்பாக்கம் தொகுதியில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணியை விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதியில் 129-வது வார்டு அருணாசலம் பிரதான சாலையில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் நடைபாதை கட்டும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி கலந்து கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடைபாதை கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.காமராஜ், பி.டி.சி.செல்வம், வட்ட கழக செயலாளர் பி.கசாலி, கதிர்வேல், எஸ்.பி.குமார், டி.ரமேஷ், தனசேகர், காணுநகர் தினேஷ், கணேசன், அண்ணாமலை, வைகுண்டராஜன், மகாபழனிசாமி, ஏ.கே.சீனிவாசன், ரா.தியாகராஜன், முரளி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.