தமிழகம்

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

சென்னை

வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத்திருத்தம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான சத்யபிரத சாகு 01.01.2021 -ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளதால், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தொடர்திருத்த நடைமுறையின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் குறித்த கோரிக்கை மற்றும் ஆட்சேபனை விண்ணப்பங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வாக்காளர் உதவி எண் (1950) செயல்பாடு, வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.