சிறப்பு செய்திகள்

மகளிரை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி-விடியா அரசுக்கு எதிராக பெண்கள் கருத்து

சென்னை

தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்ற முடியாத திராணியற்ற முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்து பெண்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விடியா தி.மு.க. அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் , மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து உள்ளார்.

விடியா தி.மு.க. அரசின் இத்திட்டம் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ரூபாய் 1000 தருவோம். முதியோர் உதவித்தொகைை ரூபாய் 1500 ஆக உயர்த்தி தருவோம் என்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும்,

இப்போது விடியா அரசின் முதலமைச்சராக இருப்பவருமான ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் ஊர், ஊராக, வீதி, வீதியாக சென்று வாக்காளர்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதை இதுவரை நிறைவேற்றி இருக்கிறார்களா? இல்லையே. அதுபோல தான் இப்போது தொடங்கியிருக்கும் புதுமைப்பெண் திட்டமும் கூட.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட பெண்களின் திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டம், மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற பெண்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு மூடுவிழா கண்ட விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகியும் மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஒன்றை கூட கொண்டு வரவில்லை. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு பயன் அளிக்கும் வகையிலான திட்டங்களை தான் தொடங்கி இருக்கிறார்கள்.

திருவாரூரில் கருணாநிதியின் பெயரில் அருங்காட்சியகம், சென்னையில் கருணாநிதியின் சமாதி, மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம், கடலுக்குள் எழுதாத பேனா.

இவையெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறது தி.மு.க. அரசு. மக்கள் வரிப்பணத்தை எடுத்து ஸ்டாலின் குடும்பத்திற்கு பயன் அளிக்கும் திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். இது தான் ஸ்டாலின் ஆட்சியின் ஓராண்டு சாதனையா?

மாணவிகளுக்கு மட்டும் உயர் கல்வி பயில்வதற்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் முதல்வர் ஸ்டாலின் ஏன் மாணவர்களுக்கு வழங்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் பல பேருந்து நிலையங்களில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் மூடப்பட்டுள்ளது.
பெண்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக ஸ்டாலின் அரசு திகழ்கிறது.

இவ்வாறு வேலூர் மாவட்ட மக்கள் கூறினர்.