மற்றவை

தேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்

தேனி

தேனி மாவட்டம், தேனியில் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் திறந்து வைத்தார்.

தேனி மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமை தாங்கினார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலை வகித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும், குத்துவிளக்கேற்றியும் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர் நன்றி கூறினார். இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.