தற்போதைய செய்திகள்

2021-ம் ஆண்டிலும் கழகம் மீண்டும் வெற்றிபெற உழைக்க வேண்டும் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

திருப்பூர்

கழக அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும், 2021-ம் ஆண்டிலும் கழகம் மீண்டும் வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்-2 சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதியில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைக்கு பூத் வாரியாக உறுப்பினர்களை சேர்த்து, நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் கே.எம்.மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேரூராட்சி கழக செயலாளர் பி.நரிமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் மு.இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து வரும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா 2008-ம் ஆண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கினார். கழகத்தில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் உறுப்பினராக இணைந்தனர். இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர் கடினமாக உழைத்தனர்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்து சென்றனர். கழகம் 2011, 2016-ல் மாபெரும் வெற்றிபெற்றது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் திமுகவின் அராஜகங்களையும், அம்மா வழியில் நடைபெறும் நல்லாட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும். 2021-ம் ஆண்டிலும் கழக அரசு மீண்டும் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும்.

தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கும் கழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் எந்த இயக்கத்திலும் இல்லாத அளவிற்கு இந்த இயக்கம் வலுப்பெற்று கொண்டிருக்கிறது. இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இல்லாத இந்தக் காலகட்டத்தில் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை ஈட்டவும், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திடவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பெரும்புகழையும், பெருமையையும், சிறப்பையும் தொடர்ந்து நிலைநாட்டவும் நாம் அனைவரும் சபதம் ஏற்று செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.