தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஆதிவாலிஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு, பூங்கா நடைபாதை பணி அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு

விழுப்புரம்

விழுப்புரம் ஆதிவாலிஸ்வரர் கோயில்குளம் கட்டுமானப்பணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் நகராட்சி பூந்தோட்டம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆதிவாலிஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு மற்றும் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவசர பணிகளுக்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வினில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட பண்டக சாலை தலைவர் பசுபதி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாணவரணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமராஸ், ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ராமதாஸ், செந்தில், புஷ்பலதா கோதண்டராமன், ஒப்பந்ததாரர் டி.கே.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.