தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்று கொள்ளப்படாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை

தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்று கொள்ளப்படாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைச்சர்கள் டி,ஜெயக்குமார் மற்றும் கே.பி அன்பழகன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கு ஏற்ற மாநிலம் என்பதை நோக்கி தமிழகம் சென்று கொண்டுள்ளது.கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை புரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்கட்சி பேச வேண்டும்.தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்று கொள்ளப்படாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.பி அன்பழகன்,நீதிமன்றத்தின் உத்தரவு படி கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தப்படும். கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில் கல்வி குழுவின் வழிமுறைகளை அரசு பின்பற்றும்.

கல்லூரி அரியர் தேர்வுகள் ரத்து செய்த உத்தரவு செல்லாது என அகில இந்திய தொழில் கல்வி குழு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை. அந்த கடிதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தால் எதற்காக அவர்கள் விளக்கம் கேட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும்.என்று தெரிவித்தார்.