ஈரோடு

வருகிற 2021ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைய பொதுமக்கள் நல்லாதரவை வழங்க தயாராகி விட்டார்கள் – அந்தியூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் பேச்சு

ஈரோடு

வருகிற 2021 ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைய பொதுமக்கள் நல்லாதரவை வழங்க தயாராகி விட்டார்கள் என்று அந்தியூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் பேசினார்.

ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி டி.என்.பாளையம் ஒன்றியத்தில் வாணிப்புத்தூர் பேரூராட்சி, பெருமுகை, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் புஞ்சை துறையம்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சிகளில் கழக உறுப்பினர்களிடம் அந்தியூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜா கிருஷ்ணன் உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.

கழக உறுப்பினர் அட்டைகளை வழங்கி கே.ஆர்.ராஜா கிருஷ்ணன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கழகத்தையும், ஆட்சியையும் கட்டி காத்து வருகிறார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜிஆருக்கு பிறகு அம்மா அவர்கள் ஆண்ட கட்சியே மீண்டும் ஆள்கின்ற சாதனையை ஏற்படுத்தினார். மீண்டும் 2021ம் ஆண்டிலும் கழக அரசு தொடர்ந்து அமைய நாம் பாடுபட வேண்டும்.

அந்தியூர் தொகுதியில் தார்சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தியூர் தொகுதி கழகத்தின் எஃகு கோட்டை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக மக்களை காப்பாற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அயராது பாடுபட்டு வருகிறார். பொது மக்களாகிய நாமும் முக கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். அந்தியூர் தொகுதியில் உள்ளாட்சி தேர்தலிலும் நமது தொகுதியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பர்கூர் மலைப் பகுதியில் தமிழ்நாடு கர்நாடக இணைப்பு சாலை ரூ . 70 கோடி மதிப்பில் போடப்பட்டுள்ளது. அத்தாணி, துறையம்பாளையம் பகுதியில் ரூ .10 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. கழக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். வருகிற 2021ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைய பொதுமக்கள் நல்லாதரவை வழங்க தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு கே.ஆர்.ராஜா கிருஷ்ணன் எம்.எல்.ஏ கூறினார்.

நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஹரி பாஸ்கர், வாணிப்புத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் டி.பி.ரங்கநாதன், நேசமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ.கே.என்.பூபதி, நாகராஜ், முனியப்பன், நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி மாரண்ணன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் செந்தில்குமார் ,ராஜசேகர், புஞ்சைதுறையம்பாளையம் ஊராட்சி தலைவர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அலமேலு ஜெயராமன், தங்கராசு, முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.