தற்போதைய செய்திகள்

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் சகோதரர் நாராயணன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

சென்னை

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் சகோதரர் நாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அன்பு சகோதரர் நாராயணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 6.9.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன். நாராயணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் ஈடுசெய்ய முடியாத துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை அமைச்சருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் அளிக்கவும், நாராயணனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.