சேலம்

முதலமைச்சர் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக அரும்பாடு பட்டார் – மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேச்சு

சேலம்

முதலமைச்சர் உயிரை பணயம் வைத்து தமிழக மக்களுக்காக அரும் பாடுபட்டு வருகிறார் என்று தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாழப்பாடி ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார் வாழப்பாடி பேரூர் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்

இதில் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலன் ஒன்றே தன்னலம் எனக்கருதி கொரோனோ காலகட்டத்திலும் உயிரை பணயம் வைத்து மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் பணியாற்றி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் காணொளி காட்சி மூலம் கூட்டம் நடத்தி வருகிறார். மக்களோடு மக்களாக மக்களில் ஒருவராக இருந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் பணியாற்றி வருகிறார்.

காணொளிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை பற்றி குறை கூற எந்தவித அருகதையும் கிடையாது. இளைஞர்களின் நலன் காத்திட அவர்களின் வாழ்நிலையை முன்னேற்றிட பல்வேறு அறிவிப்புகளை வழங்கி இளைஞர்களின் நாயகனாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளங்கி வருகிறார்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் ரத்தத்தால் உருவான அதிமுக கடைசி மூச்சு இருக்கும் வரை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் பணியாற்றி உள்ளார். அம்மா அவர்களின் மாணவனாக இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் பணியாற்றுவதே மகேசன் சேவை என்ற அடிப்படையில் சிறப்பான சேவை செய்து வருகிறார்.

இதனைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். எத்தனை பொய் குற்றச்சாட்டுகள் வைத்தாலும் மக்கள் மத்தியில் கழக அரசின் செல்வாக்கை எவராலும் சரிக்க முடியாது. எத்தனை எதிர்க்கட்சிகள் வந்தாலும் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று கழக அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது. மக்களோடு மக்களாக விவசாயி ஆக இருந்து மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

விவசாயிகள் அனைவரும் இந்த ஒரு சாமானியன் முதல்வரை சந்தித்து தனது கோரிக்கைகளை வைக்கலாம் என்ற அடிப்படையில் மக்கள் செல்வன் ஆக விளங்கி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. தகவல் தொழில்நுட்பம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தகவல் தொழில் நுட்பம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை போன்ற இளம் ரத்தம் அதிமுகவிற்கு உள்ளது. வெட்டி வா என்றால் கட்டி வரும் இளைஞர்கள் அதிமுகவில் உள்ளனர். இவர்கள் என்றும் அதிமுக அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.