திருவண்ணாமலை

ஊராட்சி கிளைக் கழகங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

திருவண்ணாமலை

ஊராட்சி கிளைக் கழகங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த செலவில் வழங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட அம்மா பேரவை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி, இளைஞர் பாசாறை இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றியத்துக்குட்பட்ட 45 ஊராட்சி கழகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதமும் மொத்தம் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். முன்னதாக கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாஷ்யம் அனைவரையும் வரவேற்றார். கீழ்பெண்ணாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் கழகமே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா பேரவை எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகிய சார்பு அணிகளின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கு அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.

மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியை அதிமுகவே வென்றெடுக்கும். அது மட்டுமல்லாது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். அதற்கு கழக நிர்வாகிகள் இளைஞர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அடிமட்ட தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 45 ஊராட்சிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் வீதமும் மொத்தம் ரூ 3 லட்சம் நிதி உதவியை தனது சொந்த பணத்தில் இருந்து கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.