தமிழகம்

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை

விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன.

இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து இன்று முதல் (9ம்தேதி) முதல் 6 தினங்களுக்கு 264.38 மி.கன அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.