சேலம்

பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் பால் வார்த்தவர் முதலமைச்சர் – தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பெருமிதம்

சேலம்

தமிழக பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் பால் வார்த்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என்று
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பெருமிதத்துடன் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மேற்கு ராஜபாளையத்தில் விவசாயிகள் பெரும்பாலும் பால் உற்பத்தியை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் பால் உற்பத்தியாளர் சங்க புதிய கட்டிடம் வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர், அதன் அடிப்படையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தை ஆள்வது ஒரு விவசாயி. விவசாயிகளின் பிரச்சினைகள் முழுவதையும் அறிந்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே. ஏர் பிடிப்பது, வயலில் பாடுபடுவது, நீர் தண்ணீர் கட்டுவது வயலில் இறங்கி வேலை செய்வது, நாற்று நடுவது இது அத்தனையும் அறிந்த விவசாயி முதல்வர் நமது எடப்பாடி கே.பழனிச்சாமி. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயல்வெளியில் சிமெண்ட் தரையை போட்டு பார்வையிட்டு நாடகத்தை நடத்திச் சென்றவர்.

விவசாயிகள் தினம்தோறும் படும் இன்னல்களை அறிந்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. அதனால் தான் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து புதிய திட்டங்களையும் விவசாயத்தில் புதிய புரட்சியை கொண்டு வர வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அதன்படி நாட்டின் முதுகெலும்பான விவசாயம் வளர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பால் உற்பத்தியில் விவசாயிகள் அதிகப்படியாக ஈடுபட்டு வருவதால் வெளிநாடுகளுக்கு சென்று பால் உற்பத்தியை எவ்வாறு பெருக்க வேண்டும் என பல்வேறு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து அதன்படி புதிய முயற்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு பால் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. அவர் என்றென்றும் அம்மா விட்டுச்சென்ற பணியை முதலமைச்சர் சிறப்பாக செம்மையாக செய்து வருகிறார் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இவ்வாறு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் துணைத்தலைவர் ஜெகதீசன், இயக்குனர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி, மேற்கு ராஜா பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், பேளூர் நகர துணை செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.