கிருஷ்ணகிரி

திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 1000 பேர் விலகி பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே திமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் கழகத்தில் இணைத்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது
ஓசூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைப்பெற்றது, சென்னசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, பாகலூர் பாடாதேபள்ளி கோலாதாஸ்புறம் பலவண்ணப்பள்ளி நந்திமங்கலம் ஆகிய கிராமங்களிலிருந்து திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணைந்தனர்