தற்போதைய செய்திகள்

விளையாட்டு மைதானங்களில் 100 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை

விளையாட்டு மைதானங்களில் 100 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விளையாட்டு மைதானங்கள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கவேண்டும். விளையாட்டு மைதானங்களுக்கு வருபவர்கள் அவர்களாகவே தண்ணீர் பாட்டில்களை கொண்டுவரவேண்டும். முககவசம் கட்டாயம் அணியவேண்டும்.விளையாட்டு மைதானங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே யாரும் எச்சிலை துப்பக்கூடாது.

விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.அனைவரும் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.65 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 வயதுக்கு கீழுள்ளவர்களும் மைதானங்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.விளையாட்டு மைதானங்களில் தின்பண்டங்கள் விற்க அனுமதி இல்லை. கழிவறைகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கொரோனா குறித்து பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் உள்ளிட்ட நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.