தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தற்போது காற்று மாசு இல்லை – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

தமிழகத்தில் தற்போது காற்று மாசுபடவில்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி கவுந்தப்பாடியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 5690 குடியிருப்புகளுக்கு 433.14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதி மற்றும் 387 லட்சம் ரூபாய் சாலை மேம்பாடு, சிறு பாலங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் என 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது, இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.ஊராட்சி பகுதிகளில் 60 சதவீத தண்ணீர் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனிக் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தற்போது பணிகள் ஊராட்சிப் பகுதிகளில் துவக்கப்பட்டு உள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சியில் 5690 குடியிருப்புகளுக்கு ரூ.43.3 கோடி மதிப்பில்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதால் நல்ல மழை பெய்கிறது. கடைமடை வரை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேருகிறது. தார்சாலை வசதிகள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பவானி தொகுதியில் 100 கோடிக்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனோ தாக்கம் குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனை அந்த அந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது காற்று மாசுபாடு இல்லை. இ.ஐ.ஏ 2020 குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கோவை செட்டிபாளையத்தில் அமையவுள்ள மருத்துவ கழிவுளை சுத்திகாிப்பு செய்யும் ஆலை குறித்த புகாரினை மாவட்ட ஆட்சியா் விசாரணை செய்து உாிய நடவடிக்கை மேற்கொள்வாா்.

இவ்வாறு அமைச்சா் கே.சி.கருப்பணன் தொிவித்துள்ளாா்.

இந்நிகழ்ச்சிகளில் பவானி ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் அய்யம்பாளையம் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவகாமி சரவணன், கே.கே.விஸ்வநாதன், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவாதங்கமணி , துணைத் தலைவர் தீபிகா, கே.என்.ஆறுமுகம், கவுந்தப்பாடி சிவக்குமார், ஜீவா ராஜசேகர்,கவுன்சிலர் மணி சந்தோஷ் பரமசிவம், விஜயலட்சுமி, ஆர்.கே.விஜய், நல்லி விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்