தற்போதைய செய்திகள்

சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 33,000 நபர்கள் வி.வி.ஆர்.சத்தியன் தலைமையில் கண்தானம் செய்து உறுதி மொழி ஏற்பு

சேலம்

தானத்தில் சிறந்தது கண் தானம் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்திடாத வகையில் கண் தானம் செய்திட்ட முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி செலுத்தும் வகையில் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 33,000 நபர்கள் வி.வி.ஆர்.சத்தியன் தலைமையில் கண்தானம் செய்து உறுதி மொழி ஏற்றனர்

உலக கண் தானத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் தனது கண்களை தானம் செய்தார். இதனையொட்டி சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முதலமைச்சரை பின்பற்றி கண்தானம் செய்யும் விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இதில் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தலைமை தாங்கினார். இதில் அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா பங்கேற்றார் அவர் முன்னிலையில் கண் தானம் செய்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 17 மாவட்ட செயலாளர்களான கே.ஏ.கனகராஜ், ஆர்.ஜெயகாந்தன், முரளி பாலுச்சாமி,அபீஸ் கே.செல்வம், ஆர்.கே.ஜெயபாலன், சிங்கராஜ பாண்டியன், மாணிக்கம் ஜெயக்கொடி, பாண்டிராஜ், கே.எம்.கோபி, ஏ.சரவணகுமார், ஆர்.ஸ்ரீதர், சதீஷ்குமார், ரவி ஆறுமுகம், மசூது ஆகியோர் பங்கேற்றனர்

இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அனைத்து மதங்களிலும் தானத்திலே சிறந்தது கண் தானம் என்று கூறப்பட்டுள்ளது. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறப்பது அரிது என்று இதிகாசப்பாடல் வரிக்கு ஏற்ப ஒரு மனிதனுக்கு அரிது கண்ணாகும். அதில் குறிப்பாக கிராமப்புற ஏழை விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தங்களின் அயராத உழைப்பால் பல்வேறு கண் நோயினால் பாதிக்கப்பட்டு பார்வைக் இழக்கின்றனர்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் அறிந்த நமது முதலமைச்சர் விவசாயிகள் உயர்ந்தால் தான் இந்த நாடு உயரும் என்று பல்வேறு திட்டங்களை அளித்து அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்தது மட்டுமல்லாது இன்றைக்கு தன் கண்ணையே தானமாக கொடுத்து அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்துள்ளார்.

கடையெழு வள்ளல்கள் கூட தனது கண்களை தானம் செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு தமிழக மக்களுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்து இதன் மூலம் இந்திய திருநாட்டில் எந்த முதலமைச்சரும் செய்திராத வகையில் கண்களை தானமாக அளித்து தானத்தில் சிறந்தது கண் தானம் என்று மீண்டும் உலகிற்கு எடுத்துச் சொல்லி இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சருக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழகத்தில் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக திகழும் ஒரே இயக்கம் அம்மாவின் புனித இயக்கம். அந்தவகையில் ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் அணிதிரண்டு உள்ளனர் என்று மீண்டும் உலகிற்கு நிரூபிக்கும் வகையிலும் முதலமைச்சர் கண்தானம் செய்திட்டதற்கு நன்றியினை உரித்தாக்கும் வகையிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்ஆசியோடு சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 11 வருவாய் மாவட்டங்களில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்தவர்கள் 3,000 பேர் வீதம் 33,000 பேர் தங்கள் கண்களை தானமாக கொடுத்து உறுதி கீழ் ஏற்கிறோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் இறப்புக்கு பின் கண்களை தானம் செய்ய உறுதி ஏற்கிறோம்.கார்னியா மற்றும் அறுவை சிகிச்சைக்கு எங்கள் கண்களை உபயோகப்படுத்திக் கொள்ள இதன் மூலம் சம்மதிக்கிறோம். கல்வி மற்றும் ஆராய்ச்சி எந்த முறைகளுக்கும் எங்கள் கண்களை உபயோகப்படுத்திக் கொள்ள இதன்மூலம் சம்மதிக்கிறோம். Transplantation Of Human Organs Act 1984 ன் படி அனைத்து நிபந்தனைகளுக்கு இதை மூலம் கட்டுப்படுவதற்கு இதன் மூலம் உறுதி ஏற்கிறோம்.

எங்கள் கண்களை தானமாக கொடுத்து நம் இந்திய திருநாட்டில் உள்ள நம் தாய் தமிழ்நாட்டை பார்வையற்றவர்களே இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு உறுதி இருக்கிறோம். பொதுமக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்க ஏற்பாடு செய்வதற்கு உறுதி ஏற்கிறோம். கண் தானம் அளிக்க என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஊக்குவிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இறந்த பின் செய்ய வேண்டிய நடைமுறைகளை என் குடும்பத்தினருக்கு முன்னரே தெரிவித்து அவர்கள் உரிய வகையில் தமிழக அரசு துறைக்கு தகவல் தெரிவிக்க உறுதி ஏற்கிறோம் என்று சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் . இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் கண்தானத்தை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களையும் கண் தானம் செய்ய முயற்சிப்போம் என்று கூறி கடந்த ஏழாம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்த hims.tn.gov.in eye donor என்ற கண் தான இணையதளத்தில் சான்றிதழை பெற்றுக்கொண்டனர்