திருநெல்வேலி

கழகத்தில் இளைஞர்களை அதிகளவில் இணைக்க வேண்டும் – செல்வமோகன்தாஸ் பாண்டியன் வேண்டுகோள்

திருநெல்வேலி

கழகத்தில் அதிக அளவில் இளைஞர்களை இணைக்க வேண்டுமென தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கழக அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடந்தது. இதில் மாநில அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் கேஆர்பி. பிரபாகரன் நெல்லை கூட்டுறவு ஒன்றிய தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ பேசுகையில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கழக ஆட்சியே நீடிக்க வேண்டும் தேர்தல் களத்தில் இளைஞர் பாசறை தங்களது முழு பங்கினை ஆற்ற வேண்டும். மாணவ மாணவிகளை அதிக அளவில் இளைஞர் பாசறையில் இணைக்க வேண்டும்.என்று பேசினார்.

மேலும் தென்காசி தொகுதி மக்களின் நீண்டநாள் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கொரானா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்தும் நோய்த்தடுப்பு பணியிலும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பணியாற்றி தமிழகத்தை மீட்டு எடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது,

கழக வளர்ச்சி பணியை வேகப்படுத்தும் வகையில் கட்சியில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பேரவை, டாக்டர் எம்ஜிஆர் இளைஞர் அணி மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆணை பிறப்பித்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது,

தென்காசி தெற்கு மாவட்ட கழகத்தின் நிர்வாக வசதிக்காக தென்காசி கிழக்கு ஒன்றியம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ,ஆலங்குளம் வடக்கு ஒன்றியம், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், கடையம் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் ஆகிய புதிய ஒன்றியங்களை உருவாக்கி ஒன்றிய கழக நிர்வாகிகளை நியமனம் செய்த கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவிப்பது,

தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 48 ஆண்டுகால கனவு திட்டமான ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 41.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்த அம்மாவின் அரசியல் வழி நடந்து வரும் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தென்காசி நகர கழக செயலாளர் சுடலை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், குற்றாலம் பேரூர் கழக செயலாளர் கணேஷ் தாமோதரன், இலஞ்சி பேரூர் கழகச் செயலாளர் மயில் வேலன், மேலகரம் பேரூர் கழக செயலாளர் கார்த்திக் குமார், சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழகச் செயலாளர் முத்துராஜ், பாசறை செயலாளர் சேர்ம பாண்டி, மற்றும் கழக நிர்வாகிகள், இளைஞர் பாசறை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.