தற்போதைய செய்திகள்

38 பேருக்கு ரூ.16.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.16.90 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி அய்யலு மீனாட்சி நகரில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் ரூ.8,40,000 மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 34 நபர்களுக்கு தலா ரூ.25,000 மதிப்பில் ரூ.8,50,000 மதிப்பீட்டில் அம்மா இரு சக்கர வாகன மானிய தொகை என 38 நபர்களுக்கு ரூ.16,90,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கால்நடைம பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2,49,000 மதிப்பில் ரூ.94,62,000 மதிப்பீட்டில் 38 எண்ணிக்கையிலான பேட்டரியால் இயங்கும் மின்கல இயங்கு வாகனங்களை ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.தொடர்ந்து, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர் கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.