தற்போதைய செய்திகள்

8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது – ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

மதுரை

8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து கூறியதாவது;-

நமது முதலமைச்சர் விவசாயிக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம் கடந்த ஆண்டில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது தற்போது உள்ள சூழ்நிலைகள் கூட 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது ஏறத்தாழ 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த வடகிழக்கு பருவமழையின் போது விவசாயிகள் எப்படி எதிர்கொள்வது என்பதும் வறட்சியான காலங்களில் பயிர்கள் சேதாரமில்லாமல் சமாளிப்பது என்பது தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே அறிந்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சேதாரமில்லாமல் வெற்றி காண்பது என்பதும் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

5 ஆண்டு காலமாக உணவு தானிய உற்பத்தியில் 100 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து தேசிய அளவில் கிரிஷ் கருமான் விருதை அம்மாவின் அரசு பெற்றுள்ளது பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு இதுவரை ரூ. 7,418 கோடி வரை தொகையை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். கூட்டுறவு வங்கி மூலம் இதுவரை ரூ. 48 ஆயிரம் கோடி வரை விவசாயி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

படை பூச்சி தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக 186.25 கோடி ரூபாய் வரை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கடைமடை பகுதிகளில் தடையில்லாமல் தண்ணீர் கிடைத்தால் இந்த ஆண்டு டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் , திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10 ஏக்கரில் உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதியை அம்மாவின் அரசு பெற்றுள்ளது.

தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் சிதம்பரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரூ.15 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மையங்கள் அமைக்கப்பட உள்ளது.நெல் ரகங்களில்பாதுகாவலரான நெல் ஜெயராமன் நினைவை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யும் முறைகளான பசுமைக்குடில் சாகுபடி நிழல்வலை கொடி சாகுபடி பந்தல் சாகுபடி நிலப்போர்வை மற்றும் சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண்மை மண்டலத்திற்கான சட்ட முன்வடிவை முதன்முதலாக தாக்கல் செய்தவர் நமது முதலமைச்சர் ஆவார். நீர் வேளாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஓய்வு பெற்ற இரண்டு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மூன்று கண்காணிப்பாளர்களை ஒரு குழுவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் நியமித்துள்ளார். அம்மாவின் அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கி வருகிறது. இதில் பெண் விவசாயிகள் டிராக்டர் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் சிறு குறு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

எட்டு மாதங்கள் ஆனால் என்ன எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வைத்து மக்களை பாதுகாக்க வேண்டும் ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது ஆனால் இன்றைக்கு வீட்டிலிருந்தபடியே தகவல் தொழில்நுட்பம் மூலம் எல்லா வேலையும் மக்கள் செய்து வருகிறார்.

திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது. 8 மாதத்துக்குள் தேர்தல் வரும் தேர்தலின் மக்கள் வாக்களிப்பார்கள் அந்த தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியே உறுதி. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய போது நாம் கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை. அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் துணை முதலமைச்சரும் இந்த தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது கோட்டையில் எந்த கோப்புகள் நிலுவையில் இல்லை கடைக்கோடியில் திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு அம்மாவின் சாதாரணமாக இருந்து பிரமிக்க வைக்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சாதனை மிகுந்த ஆட்சியாக நமது முதலமைச்சரும் துணை முதலமைச்சர் செய்து வருகின்றனர்.
இதைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் அம்மா அரசின் மீது பல்வேறு பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் அம்மா அரசின் மீது மக்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் பாராட்டுகின்றனர். அதேபோல் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சியில் யுஜிசி வழிகாட்டுதல் படி செய்யப்பட்டுள்ளதாக, முதலமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சரும் தெளிவாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், விரிவாக்க இயக்குனர் ஜவஹர்லால், வேளாண்மை கல்லூரி முதல்வர் பால்பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்