திருவள்ளூர்

கழகத்தை மகத்தான வெற்றிபெற செய்வோம் – மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் சூளுரை

திருவள்ளூர்

2021 தேர்தலில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 2 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்று வெற்றிக்கனியை முதல்வர், துணை முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கூறினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றிய கழகம் சார்பில் கொண்டகரை, சுப்பாரெட்டிபாளையம், வெல்லிவாயல்சவடி, காட்டுப்பள்ளி, நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, வல்லூர், மேலூர், ஆகிய 8 ஊராட்சிகளில் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை எம்.ஜி.ஆர் இளைஞர் அணி அம்மா பேரவை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விண்ணப்ப படிவங்கள் மற்றும் நிர்வாகிகள் விபர கையேடு வழங்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் அடுத்த கொண்டகரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மோகன் வடிவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். பெண்களின் பணிச் சுமையை குறைக்க மிக்ஸி, ஃபேன் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினார். கழக ஆட்சியில் 2011 முதல் இன்று வரை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் விலையில்லாமல் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழகத்தில் மட்டும் தான். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், ரூபாய் 25 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஸ்டாலின் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கும்போது அவர் தொகுதி மக்களிடையே அவர் முகத்தைக் காட்டுகிறார். அப்பொழுது கூட அவராக சென்று மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.

நம்முடைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். மீண்டும் மூன்றாவது முறையும் கழகம் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வருகின்ற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிக்கனியை முதல்வரிடமும், துணை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.