தற்போதைய செய்திகள்

பாரதியாரின் நாட்டுப்பற்றை போற்றுவோம் – துணை முதலமைச்சர் புகழாரம்

சென்னை

பாரதியாரின் நாட்டுப்பற்றை போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது;-

அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், தமிழ்மொழி மீதும், தாய்மண்ணின் மீதும் தீராப்பற்றும் கொண்டவரும், கனல் பறக்கும் கவிதைகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவருமான மகாகவி பாரதியாரின் நினைவு நாளில், அவரது நாட்டுப்பற்றையும், புகழையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.