தற்போதைய செய்திகள்

15,039 பேருக்கு ரூ.101.50 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் 15,039 பயனாளிகளுக்கு ரூ.101.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாஞ்சில் கூட்டரங்கில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோர்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் 9 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறந்து வைத்து, 11,351 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.6,957.96 லட்சம், 988 மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக் கடனாக ரூ.862.30 லட்சம், 800 நபர்களுக்கு கோவிட்-19 கடனுதவியாக ரூ.40 லட்சம், 520 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடனாக ரூ.178.10 லட்சம், 409 பயனாளிகளுக்கு மத்தியகாலக் கடனாக (கூட்டு பொறுப்பு குழு) ரூ.380.50 லட்சம், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக ரூ.11.20 லட்சம் உட்பட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 15,039 பயனாளிகளுக்கு ரூ.101.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.அதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி வரவேற்வுரையாற்றினார். இணைப்பதிவாளர், பொது மேலாளர், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம், நாகர்கோவில் சிவ.முத்துகுமாரசாமி நன்றியுரையாற்றினார்.