தற்போதைய செய்திகள்

பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தில் முண்டாசுக் கவிஞனை வணங்கி மகிழ்கிறேன் – முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

சென்னை

பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தில் முண்டாசுக் கவிஞனை வணங்கி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“பல வேடிக்கை மனிதரை போல, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று அன்றே முழக்கமிட்ட நம் முண்டாசுக் கவிஞனை அவரின் நூற்றாண்டு நினைவு தினத்தில் வணங்கி மகிழ்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிவு செய்துள்ளார்.