தற்போதைய செய்திகள்

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை

வரும் 14 ம்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் கூடும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,சட்டப்பேரவை பணியாளர்கள்,பத்திரிகையாளர்களுக்கு நேற்று சென்னையில் கொரோனா நோய்த்தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது மரபாகும். அநதவகையில் செப்டம்பர் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படவேண்டும்.தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக தலைமை செயலகத்தில் ஏற்கனவே நடைபெறும் இடத்தில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு பதிலாக சென்னை கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்ப்பட்டது. வரும் 14 ம்தேதி கலைவாணர் அரங்கத்தின் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேரவை தலைவர் ப. தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் கடந்த 8 ம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வரும் 14 ம்தேதி முதல் மூன்று நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது,
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள்,பத்திரிகையாளர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது, அதன்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு அவரவர் இல்லங்களில் பரிசோதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பத்திரிகையாளர்கள், சட்டப்பேரவை ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி அமைந்திருக்கும் அறைகளிலேயே எம்எல்ஏக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.