கடலூர்

பு.முட்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

கடலூர்

பு.முட்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பு.முட்லூர் ஊராட்சி முஸ்லிம் தெருவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிபேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கம்மாள், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானம், அசோக்பாபு, முகமது சுகுர், இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமை ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர் கணேஷ், வருணன், பாலமுருகன், பழனியம்மாள், முகமது உசேன், மகாலிங்கம், ராஜதுரை, செளகத் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பெரியசாமி நன்றி கூறினார்.