ஈரோடு

புரட்சித்தலைவர், அம்மா திருவுருவ சிலைகள் – கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏக்கள் திறந்து வைத்தனர்

ஈரோடு

ஈரோடு அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா சிலை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஈரோடு மரப்பாலத்தில் அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சங்க வளாகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சிலைகள் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவரும், கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான முருகுசேகர் தலைமை தாங்கினார்.

இதில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலையை ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ திறந்து வைத்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிலைக்கும், புரட்சித்தலைவர் சிலைக்கும் பொதுமக்களும், கழகத்தினரும் மாலை அணிவித்தனர்.