ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு தொடங்கி வைத்தனர்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஞானபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை, முனிசிபல் காலனி எம்.ஜி.ஆர் வீதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா, ராஜாஜிபுரத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிட பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் தார்சாலை பணி என மொத்தம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆணையாளர் இளங்கோவன், பகுதி செயலாளர்கள் பி.கேசவமூர்த்தி, ஆர்.ஜெகதீசன், கே.பி.கோவிந்தராஜன், எஸ்.டி.தங்கமுத்து, ஜெயராஜ் (எ) முனுசாமி, கே.ராமசாமி, மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் மணி (எ) சின்னசாமி, எஸ்.எஸ்.ஜெயபாலாஜி, கே.ஆர்.ரத்தன் பிரித்திவி, வி.தெய்வநாயகம், சம்பத் நகர் ஜெகதீசன், மணிகண்டன், மாவட்ட அம்மா பேரவை னை செயலாளர் எஸ்.வீரக்குமார், மாணவரணி இணை செயலாளர் யுனிவர்சல் கே.என்.நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், சோழா லோகநாதன், இரா.முத்து, அக்ரஹாரம் கருப்பணன், அர்ஜுனன்,கேபிள் நடராஜன், பாலசந்திரன், பாவை அருணாசலம், அரசு வழக்கறிஞர் துரை சக்திவேல், கலாசண்முகம், மாது (எ) மாதையன், சந்தானம், காஜாமைதீன், பெரியசேமூர் ஆனந்தன், காவேரி செல்வம், சின்னு (எ) சண்முகம்,ஜீவா ரவி, பரிமளா, அழகேசன், மல்லிகா செல்வராஜ், உதயகுமார், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.