திருச்சி

அரசு மீது அவதூறு பரப்பி வரும் தி.மு.க.வுக்கு கழகம் கடும் கண்டனம் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி

மக்கள் பணியாற்றாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதுடன், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மீது, அவதூறு பரப்பிவரும் மு.க.ஸ்டாலினுக்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை வகித்தார். மாவட்டக் கழக அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் எம்.தங்கவேல் வரவேற்றார்.

கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.எம்.பரமசிவம் எம்.எல்.ஏ., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.இந்திராகாந்தி, எஸ்.ரத்தினவேல், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் சுப்பு என்ற பே.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.செல்வராஜ் தீர்மானங்களை வாசித்தார்.

இக்கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக, டாக்டர் வி.பி.எம்.பரமசிவம் எம்.எல்.ஏ., திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி ஆகியோரை நியமனம் செய்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கப்பட்டதோடு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை கிளை அமைத்து கழகப் பணியை சிறப்பாக ஆற்ற முடிவு செய்யப்பட்டது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காகவும், முக்கொம்பு மேலணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை அமைக்க ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி, அணை கட்டும் பணியை துரிதமாக நிறைவேற்றி வருவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் தியாகராஜபாகவதர் ஆகியோருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பணியாற்றாமல் வீட்டிலேயே முடங்கிபோய் கிடப்பதுடன், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியப்பாதையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, பொற்கால ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மீது, அவதூறு பரப்பிவரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைக்க அயராது பாடுபடுவோம் எள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.