காஞ்சிபுரம்

மக்கள் நலனை பேணி காப்பதில் கழக அரசு சிறந்து விளங்குகிறது – முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

காஞ்சிபுரம்

பரங்கிமலை கிழக்கு ஒன்றியத்தில் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் தொடங்கி வைத்தார். அப்போது மக்கள் நலனை பேணி காப்பதில் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது என்று பொதுமக்கள் தெரிவித்ததோடு, முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

சென்னை புறநகர் மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சி சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 22 பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளரும், கழக அம்மா பேரவை துணை செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், கழக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மல்லிகா சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பி.தாமோதரன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் வே.சங்கர், மங்களலெட்சுமி அருள், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஜி.ஜெகதீஷ், வசந்தகுமார், அரசன்கழனி பி.கண்ணன், எம்.வீரபாபு, ஜெ.கே.பலராமன், ஜான் முருகேசன், ஸ்ரீதர், மூர்த்தி, சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தை வரவேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “மக்கள் நலனை பேணி காப்பதில் இந்தியாவிலேயே தமிழக அரசு தலைசிறந்து விளங்குகிறது. இத்திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.