கன்னியாகுமரி

மூன்று ஊராட்சிகளில் ரூ.14 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் – என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரங்கோணம், கடுக்கரை, காட்டுபுதூர் ஊராட்சி பகுதிகளில், ரூ.14 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தடிக்காரங்கோணம் ஊராட்சி பகுதியில், தடிக்காரங்கோணம் சந்தையில், மேற்கூரை அமைப்பதற்காக, தோவாளை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தா.மேரிஜாய் தனது உறுப்பினர் நிதியிலிருந்து, ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அப்பணியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மா.பரமேஸ்வரன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து, ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதியின் வாயிலாக, கடுக்கரை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட, தாம்பை ஸ்ரீ இசக்கியம்மன் கோவில் வளாகத்தில், ரூ.5 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும், காட்டுப்புதூர் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட, கீழத்தெரு பகுதியில், ரூ.2 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலை பணியினையும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்.

முன்னதாக, தாம்பை ஸ்ரீ இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, பக்காய் பை தொழிற்சாலையில் தமிழ்நாடு அரசு, நியாயவிலை கடைகள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழங்கப்படும் முககவசங்களை தயாரிப்பதை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தலைவர் இ.சாந்தினி பகவதியப்பன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஏசுதாஸ், அய்யப்பன், மகாராஜன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ச.கமலா (கடுக்கரை), ஜா.கிறிஸ்டிபாய் சின்னகுமார் (காட்டுப்புதூர்), ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மா.தங்கம் (கடுக்கரை), த.செல்வகுமார் (காட்டுப்புதூர்), வார்டு உறுப்பினர் ஆர்.எல்.ராஜேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் கே.பாக்கியலெட்சுமி, லதா ராமசந்திரன், ரமணி, சுகுமாரன், ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.