தற்போதைய செய்திகள்

இன்னும் 100 ஆண்டுகள் கழகமே ஆட்சி புரியும், அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றியே தீருவோம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சபதம்

தென்காசி

இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கழகமே ஆட்சி புரிய வேண்டும் என்ற அம்மாவின் லட்சியக் கனவை நிறைவேற்றியே தீருவோம் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சபதம் மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், ஓன்றிய செயலாளர்கள் ரமேஷ், சுப்பையா பாண்டியன், வேல்முருகன், வாசுதேவன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நிவாஸ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் 2021 தேர்தலில் கழக ஆட்சி அமைய பாடுபட வேண்டும், நான் முதன்முதலில் கட்சியில் பொறுப்பு வகித்தது இளம்பெண்கள் பாசறையில் தான், அவர்கள் தான் வருங்கால கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்க வேண்டும். எந்த கூட்டம் நடத்தினாலும் அதிமுகவில் சங்கரன்கோவிலில் தான் முதலில் நடத்துவர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணமுரளி சங்கரன்கோவிலில் தான் முதல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.

அதன் பேரில் நீங்கள் இவ்வளவு பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார். அவரது கனவை நனவாக்க உங்கள் பகுதியில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்து வரும் ேதர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.

தொடர்ந்து பேசிய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா, என் தந்தை முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனுடன் நான் அனைத்து கழக கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கூட்டத்தின் வாயிலாக உங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.

எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியம் என்ற அம்மா அவர்களின் வாக்கின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வழிகாட்டியாக திகழ வேண்டும் என்றார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு கொரோனோ நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா வழியில் ஆட்சி செய்து தமிழக மக்களை காப்பாற்றி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தும், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி தொகுப்புகள் மற்றும் முககவசங்கள், கையுறைகள் வழங்கிய அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் சங்கரன்கோவில் ஒன்றிய பாசறை செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.