தற்போதைய செய்திகள்

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.1.68 கோடியில் புதிய சாலைகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பணியை தொடங்கி வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் சின்னமிட்ட அள்ளி, காரிமங்கலம் பேருந்து நிலையம் எதிர்புறம், ஆஞ்சநேயா ரைஸ் மில் ரோடு, மாரப்பக்கவுண்டர் கொட்டாய், பேரூராட்சி ஏரியின் கீழூர் ஆகிய இடங்களில் புதிய தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 25 புதிய திட்டப்பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் முதலமைச்சர் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் காரிமங்கலம் பேரூராட்சி சின்னமிட்ட அள்ளி, கண்ணாளன் கொட்டாய், பெரியமிட்ட அள்ளி, ராஜீவ் காந்தி நகர், சபரி ஐயப்பன் பள்ளி பின்புறம் ஆகிய பகுதிகளில் ரூ.33.60 லட்சம் மதிப்பீட்டில் 940 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல், 14-வது நிதிக்குழுத் திட்டம் 2019- 2020-ன் கீழ் (இரண்டாம் தவணை) வார்டு எண்.12-ல் பேருந்து நிலையம் முன்புறம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் 142 மீ தொலைவிற்கு பேவர்பிளாக் சாலை அமைத்தல், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் போயர் தெரு,அருணேஸ்வர் தெரு, சவுடப்பட்டி தெரு,தேவகாண்டலா தெரு ஆகிய பகுதிகளில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் 915 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்டவை துவங்கப்பட்டுள்ளது.

மேலும் 14-வது நிதிக்குழுத்திட்டம் 2019-2020-ன் கீழ் (முதல் தவணை) வார்டு எண்.11-ல் ஆஞ்சநேயர் ரைஸ்மில் ரோட்டில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 192 மீ தொலைவிற்கு தார் சாலை அமைத்தல்;, தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சேஷப்பநாயுடு கொட்டாய், இந்தியன் வங்கி சந்து, வெற்றிலைக்காரர் தெரு ஆகிய பகுதிகளில் ரூ18.60 லட்சம் மதிப்பீட்டில் 555 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல்,

14-வது நிதிக்குழுத் திட்டம் 2019-2020-ன் கீழ் (முதல் தவணை) வார்டு எண்.5-ல் மாரப்பகவுண்டர் கொட்டாய் மற்றும் வெற்றிலைகாரன் கொட்டாய் பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் 660 மீ தொலைவிற்கு சிமெண்ட்சாலை அமைத்தல், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் வார்டு எண்.3-ல் காமராஜர்நகர், ஏரியின் கீழூர், மேல்ஏரியின் கீழூர், கைலாச கவுண்டர் கொட்டாய், முருக்கம்பட்டி, கீழ் முருக்கம்பட்டி, மேல் முருக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ32.60 லட்சம் மதிப்பீட்டில் 1168 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல் என மொத்தம் 25 புதிய திட்டப்பணிகள் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வராஜ், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், கூட்டுறவு சங்கத்தலைவர் செந்தில்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், வட்டாட்சியர் கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.