செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் – ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கினார்

திருப்போரூர்

திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஒன்றிய கழக செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கினார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட மாமல்லபுரம் நகரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஊரடங்கு காலத்தில் 150 நாட்களுக்கும் மேலாக ஏழை மக்களுக்கு திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் இடையூறு குப்பம், கடும்பாடி கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்கும் விதமாக அந்த கிராமங்களில் உள்ள முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கு உணவு , அரிசி, மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒன்றிய கழக செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கினார். பின்னர் அங்குள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், வாலிபால், கால்பந்து ஆகியவற்றையும் வழங்கினார்.