தற்போதைய செய்திகள்

கழக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்ப்பீர் – தொழில்நுட்ப பிரிவினர், இளைஞர் பாசறையினருக்கு அமைச்சர்கள் அறிவுரை

ஈரோடு

கழக தொழில் நுட்ப பிரிவினர், இளைஞர் இளம் பெண்கள் பாசறையினர் அம்மா அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் அறிவுறுத்தினர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி ஆலோசனை கூட்டம் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது கழகம் .13 ஆண்டு காலம் அவர் உயிரோடு இருந்தவரை அவர் தான் தமிழ் நாட்டின் முதல்வர் என்ற சரித்திர சாதனை படைத்தார். அவரின் வழியில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தியாவே வியக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று நம்முடன் இல்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்திலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கழக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும், இளைஞர் இளம் பெண்கள் பாசறையினரும் வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும். குடி மராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுகிறது. நல்லாட்சி நடத்தும் அம்மா அரசை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என கூறினார்.

அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும். அணைகளில் தண்ணீர் நிரம்பி வருவதே நல்லாட்சி நடத்தி வருவதற்கு சான்று.புரட்சி தலைவி அம்மா ஆட்சி நடத்தியதை போல் திட்டங்கள் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. பவானி தொகுதி கழகத்தின் எஃகு கோட்டை. ரூ.1658 கோடி மதிப்பில் அவினாசி – அத்திக்கடவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு சமூக வலைதளங்களில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். கழக நிர்வாகிகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வருகிற 2021-ம் ஆண்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைய இளைஞர்களாகிய நீங்கள் பாடுபட வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து நம்மை காத்து கொள்ள முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினர்.