தமிழகம்

ஏப் 14 வரை மின் துண்டிப்பு இல்லை: அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

சென்னை

ஏப் 14 ம் தேதி வரை யாருக்கும் மின் துண்டிப்பு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

24 மணி நேரம்

கொரேனா வைரஸ் காரணமாக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் முழுமையாக வீட்டில் இருக்கும்போது, மின்சாரம் தடையில்லாமல் தரவேண்டும் என்பது முதலமைச்சரின் வேண்டுகோள். அந்த அடிப்படையில் நாங்களும் தொடர்ந்து எங்களுடைய மின்வாரிய அதிகாரிகளும்,பணியாளர்களும் 24 மணி நேரம் பணியாற்றிவருகிறார்கள்.

கிட்டதட்ட 80 சதவீத பணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.எங்காவது பழுது ஏற்பட்டது என்றால் உடனடியாக அங்கு பணியாளர்களை அனுப்பி,பழுதை உடனடியாக நீக்கி,அந்த பகுதியில் மின் தடையில்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அம்மா அரசின் எண்ணம்.முதலமைச்சரின் எண்ணம்.

அனைவருக்கும் பாராட்டு

இதன் அடிப்படையில் எங்களுடை அதிகாரிகளும்,பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.இந்தகாலகட்டத்தில் எப்படி சுகாரத்துறையை சேர்ந்தவர்களே,உள்ளாட்சி துறை,வருவாய்த்துறை,காவல்துறை போல மின்வாரியமும் தொடர்து அர்பணிப்பு உணர்வோடு சிறப்பாக பணியாற்றிவருகிறார்கள்.இந்த நேரத்தில் பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.கிராமங்களில் எங்காவது பழுது என்றார் உடனடியாக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அதனை சரிசெய்து அர்பணிப்போடு பணியாற்றிவருகிறார்கள்.

ஒரு நிமிடம் கூட மின்தடை இல்லை

தொடர்ந்து ஏப் 14 வரை மக்கள் வீட்டிலே இருக்கின்ற காரணத்தினால் ஒருநிமிடம் கூட மின்தடை இல்லாமல் இருந்தால்தான் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.ஐடியில் வேலை செய்பவர்கள் தற்போது வீட்டிலிருந்து பணி செய்கிறார்கள்.பல்வேறு பணிக்கு சென்றவர்கள் தற்போது வீட்டிலிருந்து பணியாற்றிவரும் காரணத்தினால்,மின்சாரம் மிக முக்கியம்.இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து மின்வாரியம் பணியாற்றி வருகிறது. பணியாற்றுவது மட்டுமல்லாமல் எப்படி வழக்கமான பணியை மேற்கொள்வார்களே,அது போல எந்த பகுதியில் சிறிய பிரச்சனை என்றாலும் உடனடியாக சென்று சரி செய்கிறார்கள்.எங்கள் பணியாளர்கள் தொடர்ந்து முதலமைச்சரின் வேண்டுகோளின்படி தடையில்லாமல் சிறப்பாக பணி செய்துவருகிறார்கள்.

ஏப் 14 ம் தேதி வரை மின் துண்டிப்பு இல்லை

வீடுகளில் மக்கள் தொடர்ந்து இருப்பதால் வீடுகளுக்கு மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தேவையில்லாத காரணத்தினால் தினந்தோறும் 4500 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.முதலமைச்சர் அறிவித்தவாறு ஏப் 14 வரை மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு இது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்.எந்த இடத்திலும் அதாவது தொழிற்சாலையாக இருந்தாலும் சரி,வீடாக இருந்தாலும் சரி,கடைகளாக இருந்தாலும் சரி மின் துண்டிப்பு என்பது இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.தொழில்சாலைகளில் தொழிலாளர்கள் பலர் இருப்பதால் அவர்கள் சமையல் செய்து சாப்பிடவேண்டும் போன்ற தேவைகளின் காரணமாக அங்கும் மின்சாரம் அளிக்கப்பட்டுவருகிறது.ஆன்லைனின் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு இருக்காது.எங்கேயும் துண்டிப்பு இல்லை.திருவாண்ணாலையில் ஒரு இடத்தில் நடந்துவிட்ட.து.எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி சரிசெய்யப்பட்டு விட்டது.மாநிலம் முழுவதும் எங்கும் மின் துண்டிப்பு இருக்ககூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தற்போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கிவருகிறோம்.

புகார் வந்தால் உடனடி நடவடிக்கை

தற்போது மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம்.மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம்
வந்துகொண்டுள்ளது. அதுபோல காற்றாலை ,சூரியசக்தி மின்சாரம் வருகின்றது.ஹட்ரோ மின்சாரம் வருகின்றது.

இதுவே தற்போது போதுமானதாக உள்ளது. தற்போது இந்த 5 நாட்களில் 300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.அடுத்தமாதம் இன்னும் அதிகமாக இருக்கும்.தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினால் வருமானம் குறைந்துள்ளது.மின்சாரம் தேவையில்லாத காரணத்தினால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளோம்.ஒரே ஒரு அனல்
மின்நிலையத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.என்னுடைய வீட்டில் 24 மணி நேரம் இயங்ககூடிய புகார் மையம் உள்ளது.எங்கு புகார் வந்தாலும் அதனை சரி செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தார்.