தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு உபகரணம் விற்பனை அங்காடியில் பெ.சின்னப்பன் எம்.எல்.ஏ ஆய்வு

தூத்துக்குடி

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான உபகரணங்கள் விற்பனை செய்யும் மகளிர் அங்காடியை அபெ.சின்னப்பன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா உட்பட தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு 144 அமல்படுத்தியதுடன் சிறப்பான மருத்துவ வசதிகளை சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்து ‌தமிழக மக்கள் அனைவரையும் பாதுகாத்திட முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அத்தனை அமைச்சர்களும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் 24.மணி நேரமும் மக்கள் நலனுக்காக பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்‌ கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான உபகரணங்களான மாஸ்க், கைகள் கழுவக்கூடிய லைசால் சோப்பு, கரைசல் பவுடர் உட்பட நோய்த் தடுப்புக்கான பொருட்களை விற்பனை செய்யும் ‌ அங்காடியை சட்டமன்ற உறுப்பினர் பெ.சின்னப்பண் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன்

பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் சுகாதார சீர்கேடுகள் சிறிதளவும்‌ ஏற்படாத வகையில். பாதுகாப்பாக வைத்திடுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ராஜ்குமார் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்

இந்த ஆய்வின் போது விளாத்திக்குளம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.