தற்போதைய செய்திகள்

அரசியல் செய்யும் நோக்கில் அரசை குறை கூற இதுவா நேரம் – கமலஹாசன், ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்

தூத்துக்குடி

கொரோனா நோய் பிடியில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்ற ஆலோசனைகளை கூறுவதை விட்டுவிட்டு நடிகர் கமலஹாசன். மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் போன்றோர் அரசியல் செய்யும் நோக்கில் தமிழக அரசை குறை கூற இதுவா நேரம் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் கொரோனா வைரஸின் தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி நிர்வாகத்தினர் உட்பட பல்வேறு அரசு துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அனைத்து துறை அதிகாரிகளும் கொரானோ வைரஸ் என்னும் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆலோசனை செய்தார்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் எந்த வெளிமாநிலத்தின் வாகனங்களும் வர முடியாத அளவில் நமது மாநிலத்திற்குள் வரக்கூடிய அனைத்து எல்லைகளையும் முடியதுடன் காவல்துறை மூலம் வேறு மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழையாத வண்ணம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்த நடவடிக்கையின் காரணமாக நோய் பாதிப்பு அதிகளவில் மக்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் 2007 பேர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு பேரிடர் மீட்புக்குழு மூலம் அத்தனை வசதிகளையும் சுகாதாரத்துறையினர் செய்து வரும் நிலையில் மக்கள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் எவ்வித தொடர்பும் வைக்காமல் தனிமைப்படுத்தி அவர்களை விட்டு மக்கள் தள்ளி இருக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் யாருக்கும் கோரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் இல்லை என்ற நிலைமை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்திட மக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்திட தாங்களே முன்வந்து அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அவசர தேவைகளுக்காக 0461 2 3 4 2101 என்ற எண்ணுக்கு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எந்த நேரமும் அழைக்கலாம். அழைத்தவுடன் உடனடியாக உங்கள் தேவைகளை அதிகாரிகள் வந்து பூர்த்தி செய்து தருவார்கள். ஆகவே ஊரடங்கு உத்தரவை தியாக உள்ளத்தோடு மக்கள் அனைவரை ஏற்றுக்கொண்டு கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் பிடியிலிருந்து மக்கள் அண்ணா உங்களை .

பாதுகாத்துக் கொள்ள அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனா நோய் பிடியில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்ற ஆலோசனைகளை கூறுவதை விட்டுவிட்டு நடிகர் கமலஹாசன். மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் போன்றோர் அரசியல் செய்யும் நோக்கில் தமிழக அரசை குறை கூற இதுவா நேரம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி.ப.ஜெய்சீலன் விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.