தற்போதைய செய்திகள்

சுகாதார கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்

அம்பத்தூர்

மருத்துவர்கள் செவிலியர்கள் தான் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு அரசின் சிப்பாய்களாக பணி புரிந்து சேவையாற்றி வருகின்றனர். சுகாதார கட்டமைப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் என்பதை நிரூபித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் குறித்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பின்னர் புழல் பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு செய்த செய்தார்.அதன்பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ படுக்கைகள் மற்றும் வருகைதரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு பின் அவர் ெசய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தனித்திரு விழித்திரு என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்று அனைவரும் வீடுகளில் தனித்துத் இருக்கிறோம்.சிலர்டெல்லி சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மூன்றில் ஒரு பங்கு தான் இருந்திருக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தன்னார்வப்பணி மிக அழகாக நடந்து வருகிறது.

சுகாதார கட்டமைப்பு இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் என்பதை நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதனை நிரூபிக்கும் தருணம் இது. 25 முதல் 30 வயதுள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் தான் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு அரசின் சிப்பாய்களாக பணி புரிந்து சேவையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

பேட்டியின் போது சுகாதாரதுறை அதிகாரிகள், மாவட்ட துணைசெயலாளர் மாதவரம் டி.தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.