தற்போதைய செய்திகள்

தூய்மைப்பணியாளர்கள், திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

செஞ்சியில் தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் 410 தூய்மை பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரிசி, காய்கறிகள், குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்கள், பாதுகாப்பு கவசங்களான கையுறை, முககவசம், முழு உடற்பாதுகாப்பு கவசம் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் காசோலைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இந்நிகழ்வினில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங்,திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை, அறங்காவலர் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் செஞ்சி. கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சோழன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சி ஒன்றிய கழக செயலாளரும், அறங்காவலர் குழு உறுப்பினருமான கோவிந்தசாமி செய்திருந்தார்.