தற்போதைய செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடைபெறும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்விக்கு 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அவசியம் என்று ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அவரின் ஆலோசனைப்படி தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3-ம்தேதிக்குப் பின்னர் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும்.

அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து வழிகாட்டுதலின் பேரில் தேர்வுகள் நடத்தப்படும். ஊரங்கிற்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்து தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு முடிந்த பின்னர், விரைவாக 12-ம்வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.