காஞ்சிபுரம்

கொரோனா நிவாரண உதவி – பெரும்பாக்கம் எ.ராஜசேகர் வழங்கினார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பெரும்பாக்கத்தில் கொரோனா வைரஸ் பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களை கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜேசேகர் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு கழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கினார்.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் மற்றும் முக கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். உடன் பெரும்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் பாலு (எ) ரங்கராஜன், பாளையன், நட்ராஜ், ஆர்.வாசுகிராஜாராம், ஆர்.சுகாசினி ரங்கராஜன், ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.